» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளிகளில் ஆசிரியர் பணி: ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம் - ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 3, ஜூலை 2026 3:38:52 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
சென்னை ஆதிதிராவிடர் நல இயக்குநரின் செயல்முறை ஆணையின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களைப் பள்ளி மேலாண்மைக் குழுவின் (SMC) மூலம் தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலிப் பணியிடங்கள் விபரம்:
பட்டதாரி ஆசிரியர் (சமூக அறிவியல்) - 1 பணியிடம்: மானாடுதண்டுபத்து அரசு ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளி.
இடைநிலை ஆசிரியர் - 3 பணியிடங்கள்: இராணிமகாராஜபுரம், திருமங்கலகுறிச்சி, மற்றும் லட்சுமிநாராயணபுரம் அரசு ஆதிதிராவிடர் நல தொடக்கப்பள்ளிகள்.
கல்வித் தகுதிகள்:
பட்டதாரி ஆசிரியர்: வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் (BA, B.Ed - சமூக அறிவியல்) ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET Paper II) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்: வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET Paper I) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தற்போதைய நடைமுறையில் உள்ள அரசு விதிகள் வயது வரம்பிற்குப் பின்பற்றப்படும்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் கால வரம்பு:
தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களின் எழுத்து மூலமான விண்ணப்பங்களை உரிய கல்வித்தகுதி சான்றுகளுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் (Post) மூலமாகவோ 'தூத்துக்குடி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலரிடம்' சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கால வரம்பு 02.07.2026 முதல் 10.07.2026 வரை ஆகும்.
முன்னுரிமை விபரங்கள்:
ஆசிரியர் நியமனத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கு (SC) முன்னுரிமை வழங்கப்படும். மேலும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகாமையில் வசிப்பவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.
இது குறித்த கூடுதல் விபரங்களைப் பெற விரும்புவோர் 7338801280, 7338801343, 7305672537 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி லூர்து அன்னை ஆலயத்தில் முப்பெரும் விழா: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு!
திங்கள் 20, ஜூலை 2026 8:21:44 PM (IST)

திருச்செந்தூர் கோவில் புனிதத் தன்மையைக் கெடுத்தால் கடும் நடவடிக்கை : காவல்துறை எச்சரிக்கை!
திங்கள் 20, ஜூலை 2026 8:12:04 PM (IST)

நீட் தேர்வை காங்கிரஸ் கட்சி எதிர்க்கிறது: மூத்த நிர்வாகி செல்லக்குமார் பேட்டி!
திங்கள் 20, ஜூலை 2026 8:06:39 PM (IST)

வாழைப் பயிருக்கு காப்பீடு: கட்டண விபரங்கள் அறிவிப்பு - செப்டம்பர் 15 கடைசி நாள்!
திங்கள் 20, ஜூலை 2026 5:40:58 PM (IST)

தூத்துக்குடியில் 26-ஆம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஆகஸ்ட் 5-ல் பெருவிழா!
திங்கள் 20, ஜூலை 2026 4:50:30 PM (IST)

தூய்மைப்பணியாளர்கள் நல வாரியத்தில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் - ஆட்சியர் தகவல்!
திங்கள் 20, ஜூலை 2026 4:44:37 PM (IST)









R.Joyce GraciaJul 7, 2026 - 03:37:40 PM | Posted IP 162.1*****