» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சமூக வலைதளங்களில் காதல் ஸ்டேட்டஸ்: வாலிபர் திடீர் தற்கொலை - போலீசார் விசாரணை!
வியாழன் 4, ஜூன் 2026 11:20:17 AM (IST)
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் திடீரெனத் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி முத்தையாபுரம் வரத விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி மகன் முனியசாமி என்ற சுரேஷ் (36). திருமண ஆகாத இவர், தனது பெற்றோருடன் வசித்து வந்தார். சுரேஷ், கடந்த சில நாட்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் காதல் தோல்வி அல்லது காதல் உணர்வுகள் சம்பந்தப்பட்ட பல்வேறு பதிவுகளையும், ஸ்டேட்டஸ்களை தொடர்ந்து பதிவிட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் அவர் முத்தையாபுரம் பள்ளிவாசலுக்கு அருகேயுள்ள ஒரு வேப்ப மரத்தில், திடீரெனத் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் முத்தையாபுரம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுரேஷின் உடலை மீட்டு, உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரது தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை. காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் குடும்பத் தகராறுகள் உள்ளதா என்ற கோணத்தில் இச்சம்பவம் குறித்து முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









