» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனு அளித்த 24 மணி நேரத்தில் 6 பேருக்கு பட்டா விநியோகம்: ஆட்சியர் விஷு மகாஜன் அதிரடி
புதன் 3, ஜூன் 2026 4:22:18 PM (IST)

ஏரல் ஜமாபந்தி முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப் பட்டா வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த 6 பயனாளிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் புதிய பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 1435-ஆம் பசலி ஆண்டிற்கான வருவாய் தீர்வாயக் கணக்குகள் முடிவு செய்யும் பணி (ஜமாபந்தி) நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஜமாபந்தி முகாமில் வருவாய் தீர்வாய அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் நேரில் கலந்துகொண்டு பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.
நேற்று (ஜூன் 2) தொடங்கிய முதலாம் நாள் ஜமாபந்தி முகாமில் இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் நிலப் பட்டா வேண்டி விண்ணப்பித்திருந்த தகுதிவாய்ந்த 6 பயனாளிகளுக்கு, 24 மணி நேரத்திற்குள் உடனடித் தீர்வாகப் புதிய பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் இன்று வழங்கிப் பாராட்டினார்.
நடப்பு நிதியாண்டிற்கான ஜமாபந்தி முகாம்கள் ஜூன் 12-ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து வட்டங்களிலும் அந்தந்த வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் நடைபெற உள்ளன. இன்று ஏரல் வட்டத்தில், ஆறுமுகமங்கலம் உள்வட்டத்திற்குட்பட்ட மாரமங்கலம், அகரம், மஞ்சள்நீர்க்காயல், பழையகாயல், முக்காணி, ராஜபதி மற்றும் புறையூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மனுக்கள் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
அதன்படி, இன்றைய தினம் நடைபெற்ற முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 44 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. நேற்று நடைபெற்ற முதலாம் நாள் முகாமில் 75 மனுக்கள் பெறப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஏரல் வட்டத்தில் மொத்தம் 119 மனுக்களை மாவட்ட ஆட்சியர் நேரடியாகப் பெற்றுக்கொண்டு, மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் தீர ஆராய்ந்து, அவற்றின் மீது மிக விரைவாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.
முன்னதாக, ஏரல் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள நில அளவைப் பிரிவின் தற்போதைய செயல்பாடுகள், நில வரைபட ஆவணங்களின் பராமரிப்பு மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் பார்வையிட்டு அதிகாரிகளுடன் விரிவாகக் கேட்டறிந்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஏரல் வட்டாட்சியர் செல்வகுமார், நில அளவைத் துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









