» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நெல்லை-தூத்துக்குடி தனியார் பஸ் கட்டணம் உயர்வு : பயணிகள் அதிர்ச்சி
ஞாயிறு 24, மே 2026 10:50:10 AM (IST)
டீசல் விலை ஏற்றம் காரணமாக நெல்லை-தூத்துக்குடி இடையே தனியார் பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
மேற்காசிய நாடுகளில் போர் பதற்றம் நிலவி வருகிறது. ஈரான் -அமெரிக்கா நாடுகள் தொடர்ந்து மோதி வருகின்றன. இதனால் இந்தியாவுக்கு பெட்ரோல், டீசல், கியாஸ் போன்ற எரிபொருட்களை கொண்டு வரமுடியவில்லை. அவ்வப்போது குறைந்த அளவு எரிபொருட்கள் வந்து சேருகிறது. இதையொட்டி நாட்டில் வர்த்தக கேஸ் சிலிண்டர் விலை ஏற்கனவே உயர்த்தப்பட்டது.
தற்போது பெட்ரோல், டீசல் விலை 3 முறை உயர்த்தப்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களில் மட்டும் லிட்டருக்கு ரூ.5 வரை உயர்த்தப்பட்டு உள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பல்வேறு பொருட்களின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. மேலும் வாகனங்களின் வாடகையும் உயர்த்தப்பட்டு வருகிறது.
இதன் எதிரொலியாக நெல்லை-தூத்துக்குடி இடையே இயக்கப்படும் தனியார் பஸ்களும் தங்களது டிக்கெட் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. அதாவது தூத்துக்குடி -நெல்லை இடையே இயக்கப்படும் சாதாரண தனியார் பஸ்களுக்கான கட்டணம் ரூ.35 வசூலிக்கப்பட்டு வந்தது.
நேற்று முதல் இந்த கட்டணம் ரூ.40 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அவதிக்கு உள்ளானார்கள். அதே நேரத்தில் அரசு சாதாரண பஸ்களில் ரூ.35-ம், ‘எண்ட் டூ எண்ட்' இடைநில்லா பஸ்களில் ரூ.50-ம், ஏ.சி. பஸ்களுக்கு ரூ.61-ம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)










