» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வரத்து குறைவால் தூத்துக்குடியில் மீன்கள் விலை உயர்வு : மீனவர்கள் மகிழ்ச்சி!
ஞாயிறு 24, மே 2026 10:40:20 AM (IST)
தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்களின் விலை உயர்ந்தது. கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க குவிந்தனர்.
தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் நேற்று கரைக்கு திரும்பினர். கடல் பகுதியில் வீசிய பலத்த காற்று காரணமாக ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற நாட்டுப்படகு மீனவர்களுக்கு மீன் பாடு இல்லாததால் அவர்கள் குறைந்தளவு மீன்களுடனே கரைக்கு திரும்பி வந்தனர்.
இதனால் திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் நேற்று மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது. பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை காரணமாக ஏராளமான பொதுமக்களும், வியாபாரிகளும் மீன்கள் வாங்க துறைமுகத்தில் குவிந்தனர்.
வரத்து குறைவான நிலையில் மீன்கள் வாங்க கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலையும் கடந்த வாரத்தை போன்று உயர்ந்தே காணப்பட்டது. கடந்த வாரம் விற்பனையானது போன்றே சீலா மீன் கிலோ ரூ.1,300 முதல் 1,600 வரை விற்பனையானது. ரூ.500 முதல் 700 வரை விற்பனையான விளைமீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ ரூ.500 முதல் 750 வரையும், ரூ.2,000 முதல் ரூ.2,300 வரை விற்பனையான ஒரு கூடை சாளை மீன் ரூ.2500 வரையும் விற்பனையானது.
மேலும் குறுவளை மீன் கிலோ ரூ.500 வரையும், கேரை மற்றும் சூறை மீன்கள் கிலோ ரூ.200 முதல் ரூ.300 வரையும் விற்பனையானது. ஏற்றுமதி ரக மீன்களான தம்பா, பண்டாரி ஆகிய மீன்கள் ரூ.400 முதல் ரூ.500 வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. விலையை பொருட்படுத்தாமல் பொதுமக்களும், வியாபாரிகளும் போட்டி போட்டு மீன்களை வாங்கி சென்றனர். மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டாலும் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)










