» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டேங்கர் லாரி மீது பைக் மோதி விபத்து இளைஞர் பலி! – மற்றொருவர் படுகாயம்!
வெள்ளி 22, மே 2026 12:18:08 PM (IST)
தூத்துக்குடி அருகே சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்டிருந்த பெட்ரோலிய டேங்கர் லாரியின் பின்புறத்தில் பைக் மோதிய விபத்தில், இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி குமரன் தெருவைச் சேர்ந்த கருப்பசாமி மகன் மாரியப்பன் (52). இவர் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின் டேங்கர் லாரியில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். மாரியப்பன் நேற்று தூத்துக்குடியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரிபொருளை முழுமையாக இறக்கிவிட்டு, காலியான டேங்கர் லாரியுடன் தூத்துக்குடி - திருநெல்வேலி நெடுஞ்சாலை வழியாகத் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார்.
புதுக்கோட்டை புதிய பாலத்தின் மேற்குப் பகுதிக்கு வந்தபோது, ஓட்டுநர் மாரியப்பன் டேங்கர் லாரியைச் சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு, அதற்கு எதிரே உள்ள உணவகத்திற்குச் சாப்பிடுவதற்காகச் சென்றுள்ளார். அதே நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் ராஜேஷ் (31) மற்றும் தக்கலை பகுதியைச் சேர்ந்த தங்கசாமி மகன் ஜோன்ஸ் குமார் (35) ஆகிய இருவரும் தங்களது யமஹா பைக்கில் தூத்துக்குடி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர்.
பைக்கை ராஜேஷ் ஓட்டியுள்ளார். புதுக்கோட்டை புதிய பாலம் அருகே பைக் வந்தபோது, எதிர்பாராத விதமாகச் சாலையோரம் நின்றுகொண்டிருந்த பாரத் பெட்ரோலிய டேங்கர் லாரியின் பின்புறத்தில் பைக் அதிவேகமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கின் பின்புறம் அமர்ந்திருந்த ஜோன்ஸ் குமார் தூக்கி வீசப்பட்டு, தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்தார். பைக்கை ஓட்டி வந்த ராஜேஷிற்கு பலத்த எலும்பு முறிவுகள் ஏற்பட்டன.
சம்பவம் குறித்துத் தகவலறிந்த புதுக்கோட்டை காவல் நிலையப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வந்து, ஜோன்ஸ் குமாரின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், படுகாயம் அடைந்த ராஜேஷை மீட்டுத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்துப் புதுக்கோட்டை போலீஸார் விபத்து வழக்குப் பதிவு செய்து, டேங்கர் லாரி ஓட்டுநர் மாரியப்பனைக் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)











Babuமே 22, 2026 - 01:19:17 PM | Posted IP 162.1*****