» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காங்கிரஸ் மூத்த நிர்வாகி திமுகவில் ஐக்கியம்: கீதா ஜீவன் முன்னிலையில் இணைந்தார்!
வியாழன் 21, மே 2026 4:32:40 PM (IST)
தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன் உட்பட 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் முரளிதரன் மற்றும் மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கீதா ஜீவன் முன்னிலையில் எட்டையாபுரம் சாலை கலைஞர் அரங்கில் திமுகவில் இணைந்தனர்.
காங்கிரஸ் கவுன்சிலர்கள் சந்திரபோஸ், எடின்டா, முன்னாள் நகரமன்ற உறுப்பினர் வெங்கடசுப்பிரமணியன், மண்டலத்தலைவர் ராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் சாந்திமேரி, விவசாய அணி தலைவர் பாலசுப்பிரமணியன், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் ஜெயகிங்ஸ்டன் மற்றும் 27 வார்டு தலைவர்கள் உட்படப் பலர் திமுகவில் இணைந்தனர். அவர்களைக் கருப்பு சிவப்பு சால்வை அணிவித்து கீதா ஜீவன் வரவேற்றார்.
திமுகவில் இணைந்த பின் முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முரளிதரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 14 ஆண்டுகளாக திமுகவுடன் இணக்கமாக இருந்த காங்கிரஸ் தலைமை, தற்போது கொள்கைகளைத் துறந்துவிட்டு 2 அமைச்சர் பதவிகளுக்காகத் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. தூத்துக்குடி காங்கிரஸ் தலைவர்கள் சகாயராஜ், பெருமாள்சாமி ஆகியோர் கூட்டணி தர்மத்திற்கு எதிராகச் செயல்பட்டனர்.
36 ஆண்டுகள் காங்கிரஸில் உழைத்த எங்களது கருத்துக்களைத் தலைமை மதிக்கவில்லை. தவெக தலைவர் விஜய் பாஜகவின் ஒரு அங்கமாகவே திகழ்கிறார். உண்மையான காங்கிரஸாரான நாங்கள் இனி கடைசி வரை திமுகவிற்கு விசுவாசமாகப் பணியாற்றுவோம் என்றார். இந்நிகழ்வில் திமுக மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை மேயர் ஜெனிட்டா மற்றும் மண்டல, பகுதிச் செயலாளர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பணிக்கநாடார்குடியிருப்பு ஸ்ரீ கணேசர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
ஞாயிறு 24, மே 2026 8:38:47 PM (IST)

உரத்தின் விலையை பல மடங்கு உயர்ந்திய மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்: விவசாயிகள் முடிவு!
ஞாயிறு 24, மே 2026 8:36:21 PM (IST)

வீட்டின் வெளியே தூங்கிய பெண் பாம்பு கடித்துப் பரிதாப பலி! – தூத்துக்குடி அருகே பரிதாபம்!
ஞாயிறு 24, மே 2026 2:09:01 PM (IST)

குடும்பத் தகராறில் விஷம் குடித்த விவசாயி சாவு!
ஞாயிறு 24, மே 2026 2:00:56 PM (IST)

தூய்மைப் பணியாளர்களுக்குப் பாதுகாப்பு உடைகள், கையுறைகள் : மேயர் ஜெகன் பெரியசாமி வழங்கினார்
ஞாயிறு 24, மே 2026 12:42:00 PM (IST)

தூத்துக்குடியில் 14 மணிநேர தொடர் மின்வெட்டு : பொதுமக்கள் கடும் அவதி!
ஞாயிறு 24, மே 2026 12:31:32 PM (IST)











muthuமே 22, 2026 - 01:48:39 PM | Posted IP 172.7*****