» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பூட்டிய வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் நகை, ரூ.7,000 திருட்டு - மர்ம நபர்கள் கைவரிசை!
செவ்வாய் 19, மே 2026 12:44:14 PM (IST)
கயத்தாறில் பூட்டியிருந்த வீட்டின் சாவியை எடுத்து 3 பவுன் தங்க நகை மற்றும் 7 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள், திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வடக்குத் தெருவில் வசிப்பவர் பலவேசம் முத்து என்பவரது மனைவி பேச்சியம்மாள் (60). இவர் தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். நேற்று காலை பேச்சியம்மாள் வழக்கம்போல் தனது வீட்டின் வெளிக்கதவைப் பூட்டிவிட்டு, அதன் சாவியை வீட்டின் அருகிலேயே ஒரு பாதுகாப்பான இடத்தில் புதைத்து மறைத்து வைத்துள்ளார். பின்னர் அவர் காட்டு வேலைக்குச் சென்றுவிட்டார்.
மாலை வேலை முடிந்ததும் பேச்சியம்மாள் வீட்டிற்குத் திரும்பியுள்ளார். அப்போது, வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்ட இடத்திலிருந்து சாவியோடு திறந்த நிலையில் அப்படியே கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பதற்றத்துடன் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, உள்ளே இருந்த இரும்புத் தகரப் பெட்டியும் சாவியுடன் திறந்தே கிடந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அவர், பெட்டிக்குள் வைத்திருந்த தனது நகைகளைச் சரிபார்த்துள்ளார்.
அப்போது, பெட்டியில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் எடையுள்ள தங்க முறுக்குச் செயின் மற்றும் ரூ.7,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. பேச்சியம்மாள் தினமும் சாவியை வீட்டின் அருகே மறைத்து வைப்பதை நீண்ட நாட்களாகக் கண்காணித்து, நோட்டமிட்டு வந்த மர்ம நபர்களே இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. திருடப்பட்ட 3 பவுன் தங்க நகையின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 3 லட்சம் ரூபாய் ஆகும்.
இத்திருட்டுச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மூதாட்டி பேச்சியம்மாள் கயத்தாறு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









