» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் மே 22ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்
செவ்வாய் 19, மே 2026 12:13:17 PM (IST)
தூத்துக்குடியில் வருகிற 22ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பிரதி மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது. மே மாதத்திற்கான சிறிய அளவிலான தனியார் துறைவேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 22.05.2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோரம்பள்ளம், தூத்துக்குடியில் வைத்து நடைபெற உள்ளது.
இம்முகாமில் வேலையளிக்கும் (Employer) தனியார் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்து கொள்ளலாம் எனவும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, BE. DIPLOMA, I.T.I டிரைவர் மற்றும் கணினி பயிற்சி கல்வித்தகுதியுடைய பதிவுதாரர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
மேற்கண்ட தகுதியுள்ள தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் தங்களது பயோடேட்டா (Bio data) மற்றும் கல்விச் சான்றிதழ்களுடன் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறும் முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் செய்யப்படும் நேர்வில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ரத்து ஆகாது.
இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் வேலையளிப்போர்கள் (Employers) மற்றும் வேலைநாடுநர்கள் (Jobseekers) அனைவரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விபரங்களை பதிவுசெய்தல் வேண்டும். மேலும் வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான பல்வேறு தகவல்களை பெற THOOTHUKUDI EMPLOYMENT OFFICE என்ற Telegram Channel-ல் இணைந்தும் மற்றும் இவ்வலுவலக தொலைபேசி எண்.0461-2340159-ஐ தொடர்பு கொண்டும் பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









