» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தற்கொலை!
செவ்வாய் 19, மே 2026 12:11:43 PM (IST)
தூத்துக்குடியில் மனைவி பிரிந்து சென்றதால் உப்பளத் தொழிலாளி ஒருவர் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி எஸ்.என்.ஆர். நகர்ப் பகுதியில் வசிப்பவர் வேலுச்சாமி மகன் பாண்டி (52). இவர் அந்தப் பகுதியில் உள்ள உப்பளத்தில் தினக்கூலித் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
பாண்டிக்குக் கடுமையான மதுப்பழக்கம் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அவர் தினசரி இரவு நேரத்தில் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்து, மனைவி ராஜேஸ்வரியிடம் தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு ஏற்பட்ட தகராறில், ராஜேஸ்வரி வீட்டை விட்டுப் புறப்பட்டுத் தனது இரண்டாவது மகனின் வீட்டிற்குத் தங்கிவிடுவதற்காகச் சென்றுவிட்டார்.
இதனால் மனவேதனையில் இருந்த பாண்டி நேற்று இரவு தனது வீட்டின் அறையிலிருந்த மின்விசிறியில் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









