» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்டவாளத்தைக் கடந்தபோது ரயில் மோதி விபத்து: முதியவர் பலி!
செவ்வாய் 19, மே 2026 10:17:32 AM (IST)
கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தைக் கடக்க முயன்ற 70 வயது முதியவர் ஒருவர், எக்ஸ்பிரஸ் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி, பசும்பொன் நகரைச் சேர்ந்தவர் சொக்கலிங்கம் மகன் அருளானந்தம் (70). இவரது பேரன் ஒருவருக்குச் சென்னை எழும்பூர் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு சிகிச்சை பெற்று வரும் பேரனை நேரில் சென்று பார்ப்பதற்காக அருளானந்தம், அவரது மனைவி அமராவதி (56) மற்றும் மற்றொரு பேரனுடன் நேற்று இரவு சென்னை செல்வதற்குக் கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
ரயில் நிலையத்தில் 2-ஆவது நடைமேடைக்குச் செல்வதற்காக அருளானந்தம் மேம்பாலத்தைப் பயன்படுத்தாமல், அவசரமாகத் தண்டவாளப் பாதையை நேரடியாகக் கடக்க முயன்றுள்ளார். அப்போது இரவு 08:15 மணியளவில், செங்கோட்டையிலிருந்து சென்னை நோக்கி அதிவேகமாக வந்த செங்கோட்டை – தாம்பரம் சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், அருளானந்தம் மீது பயங்கரமாக மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட அவர், ரயிலின் அடியில் சிக்கி சுமார் 20 மீட்டர் தூரத்திற்குத் தண்டவாளத்திலேயே கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டார். இதனால் அவரது உடல் சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்துப் பரிதாபமாக உயிரிழந்தார். தன் கண் முன்னாலேயே கணவர் ரயில் மோதி உடல் சிதறி இறந்ததைக் கண்ட மனைவி அமராவதி மற்றும் பேரன் ஆகியோர் அதிர்ச்சியில் உறைந்து கதறி அழுதனர்.
இக்கோர விபத்து குறித்துத் தகவல் அறிந்த தூத்துக்குடி ரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுரேஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அருளானந்தத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து அருளானந்தம் மனைவி அமராவதி அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை செல்லவிருந்த முதியவர் ரயில் மோதி உயிரிழந்த சம்பவம் கோவில்பட்டி ரயில் நிலையப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)

கோவில்பட்டி பள்ளியில் குழந்தை தொழிலாளர்முறை எதிர்ப்பு தினம் அனுசரிப்பு
வெள்ளி 12, ஜூன் 2026 9:51:41 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

சிஎஸ்ஆர் நிதியுடன் 1000 பண்ணைக்குட்டைகள் அமைக்கும் திட்டம்: விவசாயிகளுக்கு ஆட்சியர் அழைப்பு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:52:17 PM (IST)

தூத்துக்குடியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை வாகனங்களை டிஐஜி நேரில் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 5:16:11 PM (IST)









