» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை : நீதிமன்றம் தீர்ப்பு!
செவ்வாய் 3, மார்ச் 2026 5:42:34 PM (IST)
கந்து வட்டி கேட்டு பெண்ணை மிரட்டியவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017-ம் ஆண்டு, வடக்கன்குளத்தைச் சேர்ந்த பெண் ஒருவரிடம், வள்ளியூரைச் சேர்ந்த சுடலை கண்ணன் (45) என்பவர் அதிக வட்டிக்கு பணம் கொடுத்து மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணை முடிவில், சுடலை கண்ணன் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டன. இதையடுத்து, குற்றவியல் நீதித்துறை நடுவர் மோசஸ் ஜெபசிங், குற்றவாளிக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நேற்று அதிரடி உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சிறப்பாகப் புலன் விசாரணை செய்து, நீதிமன்றத்தில் சாட்சிகளை ஆஜர்படுத்தி தண்டனை பெற்றுத் தந்ததற்காக வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், அப்போதைய இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் (தற்போது திருப்பூர் டி.எஸ்.பி.), வள்ளியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், தலைமை காவலர் பரமசிவன் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆலன் ராயன் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் நேரில் பாராட்டியுள்ளார்.
நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளில் உரிய சாட்சிகளை ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தரும் முனைப்பில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

விமான முன்பதிவு ஆளுமை மற்றும் கேபின் குழு பணியாளர் பயிற்சி: ஆட்சியர் அழைப்பு!
வியாழன் 5, மார்ச் 2026 5:26:55 PM (IST)

தாமிரபரணி அருகிலிருந்தும் குடிநீருக்குத் தவிப்பு: வசவப்பபுரம் கிராம மக்கள் திண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 4:48:17 PM (IST)

பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்பாளராக அறிவிப்பு : தூத்துக்குடியில் உற்சாகக் கொண்டாட்டம்!
வியாழன் 5, மார்ச் 2026 3:49:06 PM (IST)

12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: ஆட்சியர் நேரில் ஆய்வு!
வியாழன் 5, மார்ச் 2026 12:52:23 PM (IST)

தூத்துக்குடியில் வருவாய்த்துறையினர் சாலை மறியல் போராட்டம்: 97 பேர் கைது!
வியாழன் 5, மார்ச் 2026 12:44:13 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் 209 சப்-இன்ஸ்பெக்டர்களின் இடமாற்ற உத்தரவு ரத்து!
வியாழன் 5, மார்ச் 2026 8:41:05 AM (IST)









