» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி பண மோசடி: பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை!
புதன் 4, பிப்ரவரி 2026 8:12:30 PM (IST)
மேட்ரிமோனி இணையதளங்களை பயன்படுத்தி நடைபெறும் மாேசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
இணைய மேட்ரிமோனி தளங்களை பயன்படுத்தி திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்கள் மற்றும் பெண்களை குறிவைத்து நடைபெறும் மோசடிகள் தற்போது அதிகரித்து வருகின்றன.
அதன்படி மோசடியாளர்கள் உயர்ந்த கல்வி, வெளிநாட்டு வேலை, பெரிய வருமானம் போன்ற தகவல்களுடன் போலி மேட்ரிமோனி கணக்குகளை தொடங்கி சுயவிபரத்தை பதிவு செய்கின்றனர். பின்னர் திருமண வரன் தேடுபவர்களை குறிவைத்து மெசேஜ், வீடியோ கால் மூலம் தொடர்பை மேலும் நெருக்கம் ஏற்படுத்துகின்றனர். பின்னர் இதனை பயன்படுத்தி மோசடி நபர்கள் தங்களுக்கு மருத்துவ செலவு, வெளிநாட்டு வேலை மற்றும் முதலீடு போன்ற காரணங்களை முன்வைத்து பணம் கேட்கின்றனர். இதனை நம்பி பாதிக்கப்பட்ட நபர் பணத்தை அனுப்பியதும் மோசடியாளர் தொடர்பை துண்டித்து தலைமறைவாகி விடுகின்றனர்.
இதுபோன்ற மோசடிகளை தவிர்ப்பதற்கு முதலில் மேட்ரிமோனி தளங்களில் வரும் சுயவிபரங்களை முழுமையாக சரிபார்க்க வேண்டும். திருமண வரன் தொடர்பாக நேரில் சந்தித்தோ அல்லது அதிகாரப்பூர்வ ஆவணங்களை சரிபார்த்தோ உறுதி செய்ய வேண்டும். இதுபோன்ற போலீயான வார்த்தைகளை நம்பி எந்த காரணத்திற்காகவும் தெரியாத நபர்களுக்கு பணம் அனுப்ப கூடாது.
மேலும் இதுபோன்ற சந்தேகத்திற்கிடமான திருமண தொடர்புகள் வந்தாலோ அல்லது மோசடியில் சிக்கி கொண்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்திற்கோ, சைபர் குற்ற உதவி எண் 1930 அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யுமாறு பொதுமக்கள் நலன் கருதி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள்: போலீசார் தீவிர கண்காணிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:39:40 PM (IST)

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)










