» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்ணீர் தொட்டியில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு : தாயிடம் போலீசார் விசாரணை
செவ்வாய் 20, ஜனவரி 2026 8:11:52 PM (IST)
குலசேகரப்பட்டினம் அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 4 வயது பெண் குழந்தை இறந்த சம்பவம் குறித்து தாயிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரப்பட்டினம் அருகில் உள்ள செட்டியாபத்து கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மனைவி சத்தியா. இந்த தம்பதிக்கு சந்தோஷயானா என்ற 4 வயது பெண் குழந்தை உள்ளது. இன்று மதியம் இந்த குழந்தை வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து விட்டதாக கூறி அவரது தாயார் குலசேகரப்பட்டணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டதா? அல்லது தவறி விழுந்து இறந்ததா என்று தாயிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)

தீயணைப்புத் துறை சார்பில் 80-வது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 11:23:06 AM (IST)

சுதந்திர தின விழாவில் ரூ.10.92 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்: ஆட்சியர் விஷூ மகாஜன் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:04:55 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 80வது சுதந்திர தின விழா: மேயர் ஜெகன் பெரியசாமி தேசியக் கொடி ஏற்றினார்
சனி 15, ஆகஸ்ட் 2026 10:41:46 AM (IST)

தூத்துக்குடியில் 50 மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்கள் : அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் வழங்கினார்!
சனி 15, ஆகஸ்ட் 2026 10:31:19 AM (IST)









