» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

தூத்துக்குடியில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கோசாலையில் மாடுகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பொங்கல் வைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் கோமாதா சேவா டிரஸ்ட் சார்பில் கோசாலையில் பசுக்கள் வளர்த்து பராமரிக்கப்பட்டு வருகிறது. மாட்டுப்பொங்கலை முன்னிட்டு இன்று காலையில் அதன் நிறுவனர் சங்கர் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் நாட்டின பசுக்களை காலையில் குளிப்பாட்டி சந்தனம் குங்குமம் ஆகியவை பூசி புதிய வஸ்திரம் மற்றும் மாலைகள் அணிவிக்கப்பட்டு கிருஷ்ணர் ஆண்டாள் சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டு மாட்டுப்பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இந்த கோசாலையில் காங்கேயம், தென்பாண்டி நாடு, கிர், ஓங்கல், காங்கிரிட்ஜ், புங்கனூர் குட்டை உள்ளிட்ட 12 வகையான சுமார் 50-க்கும் மேற்பட்ட நாட்டின பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. பின்னர் மாடுகளுக்கு பிடித்த கரும்பு, வாழைப்பழம், அகத்திக்கீரை மற்றும் பொங்கல் ஆகியவை வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உழவர்களின் நண்பனான நாட்டின பசுக்களை மலர் தூவி வழிபட்டனர். பா.ஜ.க. மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் கோவில் மாசித் திருவிழா: பிப்.21-ல் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 8:20:06 PM (IST)

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)










