» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!

வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)



தூத்துக்குடி அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் டிரைவர் மற்றும் கிளீனர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள இரத்தினபுரி கிராமத்தில் வசிப்பவர் திருப்பதி இவரது மகன் தனுஷ் (25). இவர் டிரைவராக வேலை வருகிறார். இவருடன் கிருஷ்ணகிரி தோட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த பழனி மகன் மாரியப்பன் (21) என்பவர் கிளீனர் ஆக வேலை செய்து வருகிறார். இருவரும் நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து பிக்கப் வேனில் ரோஜா மலர்களை ஏற்றிக் கொண்டு நெல்லை வந்தனர். அங்கு ரோஜா பூக்களை இறக்கிவிட்டு தூத்துக்குடிக்கு பூக்களை இறக்குவதற்காக நெல்லையிலிருந்து தூத்துக்குடி வந்து கொண்டிருந்தனர்.

வாகைகுளம் டோல்கேட் அருகே ஒரு ரெஸ்டாரன்ட் அருகில் வந்து கொண்டிருந்தபோது ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரியில் பின்பக்கமாக பயங்கரமாக மோதினார்கள். இதில் வேனின் முன் பகுதி லாரிக்குள் சென்று நசுங்கியது. இதில் இதில் வேனை ஓட்டி வந்த டிரைவர் தனுஷ் மற்றும் கிளீனர் மாரியப்பன் இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
 
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை காவல் நிலைய இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு பேர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


மக்கள் கருத்து

மக்கள்Jan 17, 2026 - 12:05:24 PM | Posted IP 172.7*****

ரெஸ்டாரன்ட் நடத்துபவர்களை கண்டிக்கவேண்டும்

முத்துJan 16, 2026 - 01:40:11 PM | Posted IP 104.2*****

ரோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்த லாரி டிரைவர்களை கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்ய வேண்டும்

NamenotdisclosedJan 16, 2026 - 12:48:31 PM | Posted IP 104.2*****

Very sad, looks like the van driver slept off he is hitting a truck parked outside the road

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education



Arputham Hospital



Thoothukudi Business Directory