» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை: 5பேர் கைது
வியாழன் 15, ஜனவரி 2026 8:56:26 PM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனையை முற்றிலும் தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை. சிலம்பரசன் உத்தரவின்படி பல்வேறு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் தொடர் பண்டிகை நாட்களை முன்னிட்டு போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு தீவிர ரோந்து பணி மேற்கொள்ளவும் உத்தரவிட்டார்.
அவரது உத்தரவின் படி தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (14.01.2026) காவல்துறையினர் தீவிர ரோந்து பணி மேற்கொண்டதில் ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு இடங்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4பேரையும், மாசார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரு எதிரியும் என நேற்று ஒரே நாளில் மொத்தம் 5பேரை காவல்துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து ஆறுமுகநேரி மற்றும் மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று கஞ்சா, புகையிலை போன்ற போதைப்பொருள் விற்பனை மற்றும் கடத்தல் ஆகியவற்றை முற்றிலும் தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு ‘DrugFreeTN” எனும் செயலியை உருவாக்கியுள்ளது. மேற்படி செயலியின் மூலம் பொதுமக்கள் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள் கடத்தல் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை அநாமதேய (anonymous) தயங்காமல் புகார் அளிக்கலாம். மேலும் புகார் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துக்கொள்கிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மெட்டில்பட்டி அரசுப் பள்ளியில் வானவியல் பயிற்சி : மாணவர்கள் ஆர்வம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 4:47:38 PM (IST)

வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிப்பு!
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:57:55 PM (IST)

தூத்துக்குடி அருகே விஏஓ வீட்டில் ரூ.12லட்சம் நகை கொள்ளை: போலீசார் விசாரணை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:31:41 PM (IST)

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் 90-வது ஆண்டு விழா: இலவச மருத்துவ முகாம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:27:44 PM (IST)

தூத்துக்குடி நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: நிபுணர்கள் தீவிர சோதனை
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 3:09:03 PM (IST)

தூத்துக்குடியில் 50 ஆண்டுகால பயணிகள் நிழற்குடை இடிப்பு: முன்னாள் மேயர் கண்டனம்; கவுன்சிலர் விளக்கம்
செவ்வாய் 17, பிப்ரவரி 2026 12:58:57 PM (IST)










