» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் பரிசு தொகை முதியவர்களுக்கு கிடைப்பதில் சிரமம் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
புதன் 14, ஜனவரி 2026 3:27:24 PM (IST)
தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகை முதியவர்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எம்பவர் இந்தியா நுகர்வோர் அமைப்பு கவுரவ செயலாளர் ஆ.சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில், "தமிழக முதல்வர் மாநிலத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூபாய் 3000 உதவித் தொகையுடன் பொங்கல் பரிசு தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதனை நாங்கள் வரவேற்கின்றோம். அதே வேளையில் 50 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் குடும்ப அட்டையில் தங்களது கைரேகை சரியாக பதிவிடப்படாததினால் அவர்களுக்கு கிடைக்க கூடிய பொங்கல் பரிசு தொகை வழங்காமல் இருந்து வருகின்றது.
இது குறித்து அந்தந்த பொது விநியோகத் திட்ட கடை அதிகாரிகளிடம் கேட்டால் எங்களுக்கு கை ரேகை பதிவிட்டால் மட்டும்தான் பொங்கல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற உத்தரவு உள்ளது அதை மீறி நாங்கள் வழங்க இயலாது என்று கூறி வருகின்றனர்.
இதனால் முதியவர்கள் மற்றும் கைரேகை பதிவு செய்யப்படாதவர்கள் மிகுந்த மன உளைச்சலிலும் குழப்பத்திலும் இருந்து வருகின்றனர். மேற்படி முதியவர்களுக்கும் முறையாக ஆய்வு செய்தும் அல்லது மாற்று ஏற்பாடு செய்து அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசுத் திட்டத்தினை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)