» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் 159 கிலோ குட்கா புகையிலை பறிமுதல்: டீக்கடைக்காரர் கைது!

ஞாயிறு 11, ஜனவரி 2026 10:33:08 AM (IST)

தூத்துக்குடியில் 159 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த டீக்கடைக்காரை போலீசார் கைது செய்தனர்.  

தூத்துக்குடி சிப்காட் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் சுப்புராஜ் மற்றும் போலீசார் ரோந்து மணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது பாளை., ரோடு எப்சிஐ குடோன் அருகில் ஒரு டீக்கடையில் சோதனையிட்டபோது அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பதுத தெரியவந்தது. 

இது தொடர்பாக அந்த டீக்கடையை நடத்தி வரும், தூத்துக்குடி 3வது மைல் புதுக்குடியைச் சேர்ந்த செல்லசாமி மகன் செல்லப்பாண்டி (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கிருந்த 159 கிலோ குட்கா புகையிலை பொருட்கள், அதனை கொண்டு வந்த மாருதி கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital





CSC Computer Education



Thoothukudi Business Directory