» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் திமுக பிரமுகரின் பைக் எரிப்பு: போலீசார் விசாரணை
ஞாயிறு 11, ஜனவரி 2026 9:07:16 AM (IST)
தூத்துக்குடியில் திமுக பிரமுகர் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி குரூஸ்புரத்தைச் சேர்ந்தவர் டேனியல் (44). இவர், மாநகர திமுக மீனவரணி அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி மெட்டில்டா தூத்துக்குடி மாநகராட்சி கவுன்சிலராக உள்ளார். டேனியல் தனது பைக்கை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் நிறுத்தியிருந்தார்.
இந்நிலையில், மர்ம நபர்கள் அந்த பைக்குக்கு தீ வைத்துவிட்டு தப்பியுள்ளனர். இதில் பைக் முற்றிலும் எரிந்து சேதம் அடைந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், வடபாகம் போலீசார் வழக்குப்பதிந்து, சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்த சாம்சன், முன் விரோதம் காரணமாக பைக்கை தீ வைத்து எரித்தது தெரியவந்தது. அவரைப் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








