» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஆத்தூர் அருகே 2 ஆடுகள் திருடியவர் கைது
ஞாயிறு 11, ஜனவரி 2026 9:05:58 AM (IST)
ஆத்தூர் அருகே 2 ஆடுகளை திருடிய வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூரை அடுத்த மேலஆத்தூர், குச்சிக்காட்டைச் சேர்ந்தவர் செல்வி (64). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டு தாழ்வாரத்தில் 5 ஆடுகளை கட்டிப் போட்டுவிட்டு தூங்கச் சென்றாராம். இந்நிலையில் ஆடுகளின் சத்தம் கேட்டு செல்வி, அவரது மகன்கள் வந்து பார்த்துபோது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், 2 ஆடுகளை திருடி கொண்டு தப்பிச் சென்றது தெரியவந்ததாம்.
இதுகுறித்த புகாரின்பேரில் ஆத்தூர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, மேல ஆத்தூர் கண்ணானி தெருவைச் சேர்ந்த அருள்குமார் மகன் பார்த்திபனை கைது செய்து, 2 ஆடுகளை மீட்டனர். தலைமறைவான ஆத்தூர் அருகே நரசன்விளையைச் சேர்ந்த கணேசன் மகன் பேச்சிமுத்து என்பவரை தேடி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








