» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் வரத்து குறைவால் மீன்கள் விலை உயர்வு: மீனவர்கள் மகிழ்ச்சி
ஞாயிறு 11, ஜனவரி 2026 9:02:26 AM (IST)
தூத்துக்குடியில் வரத்து குறைவு காரணமாக மீன்கள் விலை உயர்ந்திருந்தது.
தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிப்புக்குச் சென்ற நாட்டுப் படகுகள் நேற்று கரை திரும்பின. கடல் பகுதியில் வீசிவரும் பலத்த காற்று காரணமாக, மீன்கள் வரத்து குறைவாகக் காணப்பட்டது. பொதுமக்கள், வியாபாரிகள் கூட்டம் அலைமோதியதால், மீன்களின் விலை உயர்ந்திருந்தது.
சீலா மீன் கிலோ ரூ. 1,100 வரை, விளைமீன், ஊழி, பாறை ஆகியவை ரூ. 500 - ரூ. 700, நண்டு கிலோ ரூ. 800 வரை, சாளை மீன் ஒரு கூடை ரூ. 2,000 - ரூ. 2,500, கேரை, சூரை ஆகியவை ரூ. 250 - ரூ. 300 என விற்பனையாகின. வரத்து குறைந்தபோதும் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வானிலை எச்சரிக்கை : படகுகள் நிறுத்தம்!
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால், வங்கக் கடல், மன்னார் வளைகுடா கடல், குமரி கடல் பகுதிகளில் மணிக்கு 35 கி.மீ. முதல் 65 கி.மீ. வரையிலான வேகத்தில் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட மீன்வளம்-மீனவர் நலத் துறை சார்பில், விசைப்படகு, நாட்டுப் படகுகள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்குத் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.அதன்படி, மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. 270- க்கும் மேற்பட்ட விசைப் படகுகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் மீன்பிடித் துறைமுகங்களில் நிறுத்திவைக்கப்பட்டன.
இதேபோல தருவைகுளம், வேம்பார், வீரபாண்டியன்பட்டினம், ராஜபாளையம், சிங்கத்துறை, மணப்பாடு உள்ளிட்ட பகுதிகளிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள், பைபர் படகுகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனால், மாவட்டம் முழுவதும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)









