» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா: முதன்மை நீதிபதி பரிசுகள் வழங்கினார்!
சனி 10, ஜனவரி 2026 8:43:22 PM (IST)

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்த சமத்துவ பொங்கல் விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி பரிசுகள் வழங்கினார்.
தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நீதிமன்ற வளாகத்தில் நடந்தது. இதில் பெண் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கலிட்டனர். பின்னர் மியூசிக்கல் சேர், லக்கி கார்னர், கயிறு இழுத்தல், பானை உடைத்தல் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டான்லி பிரபு வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.பி. வாரியார் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி வசந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சிறப்புரையாற்றி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்களுக்கு பரிசுகளைவழங்கினார். வழக்கறிஞர்கள் சங்க துணை தலைவர் சிவசங்கர், செயலாளர் செல்வின், இணைச் செயலாளர் பாலகுமார், பொருளாளர் கணேசன், முன்னாள் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட், வழக்கறிஞர்கள் எஸ்.எஸ்.பி. அசோக், கிறிஸ்டோபர், விஜயராஜ், உஷா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி : ஆணையர் ப்ரியங்கா துவக்கி வைத்தார்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:36:16 PM (IST)

தூத்துக்குடி தாலுகா அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை: ரூ.22,970 பறிமுதல்!
வெள்ளி 17, ஜூலை 2026 9:14:15 PM (IST)

சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக ஷேக் அப்துல் காதர் பொறுப்பேற்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:24:53 PM (IST)

மாயமான கல்லூரி மாணவியை மீட்கக் கோரி டிஎஸ்பி அலுவலகம் முன்பு உறவினர்கள் தர்ணா!
வெள்ளி 17, ஜூலை 2026 8:21:32 PM (IST)

தூத்துக்குடியில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்: 6 பேர் கைது!
வெள்ளி 17, ஜூலை 2026 8:04:33 PM (IST)

சிசு மரணங்களைத் தடுக்கத் தீவிர நடவடிக்கை: ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
வெள்ளி 17, ஜூலை 2026 5:42:07 PM (IST)








