» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி ராஜாபிள்ளை சந்தில் சாலை அமைக்க வேண்டும் : பாஜக வலியுறுத்தல்!

சனி 10, ஜனவரி 2026 8:38:21 PM (IST)



தூத்துக்குடி மாநகராட்சி 39-வது வார்டுக்குட்பட்ட ராஜாபிள்ளை சந்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை அமைக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளதாக பாஜக மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார்.

இச்சாலையில் குடிநீர் இணைப்பு பணிக்காக மாநகராட்சி நிர்வாகம் கடந்த ஆண்டு தோண்டிய நிலையில், அதன்பிறகு சாலை சீரமைக்கப்படாததால் மோடு-பள்ளம் உருவாகி, தெருவாசிகள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை மாநகராட்சிக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ராஜாபிள்ளை சந்துவை பார்வையிட்டு, அப்பகுதி மக்களிடம் 3 தினங்களுக்குள் சாலை அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.இதுகுறித்து பாரதிய ஜனதா கட்சி மாவட்ட துணைத் தலைவர் வழக்கறிஞர் சண்முகசுந்தரம் கூறுகையில் இந்த தெருவில்சாலை இல்லாததால் பள்ளி குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் கூட வர இயலாத சூழல் உள்ளது. 

மேலும் பாதாள சாக்கடை கசிவால் கழிவு நீர் வெளியேறி தொற்றுநோய் பரவும் அபாயமும் உள்ளது பாரதிய ஜனதா கட்சி போராட்டத்தை கையில் எடுத்தவுடன் மேயர் 3 தினங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மூன்று தினங்களில் எப்படி சாலை அமைக்க முடியும், முதலில் கழிவுநீர் கால்வாய். கட்ட வேண்டும் அதன்பின்பு சாலை அமைக்க வேண்டும் அவர் கூறியது போல் சாலை அமைக்காவிட்டால் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட அளவில் பெரிய போராட்டம் நடத்தும் என்று தெரிவித்துக் கொள்கிறேன் இவ்வாறு அவர் கூறினார்
 
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவி உஷா தேவி, கிழக்கு மண்டல தலைவர் ராஜேஷ்கனி, மண்டல பொதுச்செயலாளர் சண்முகசுந்தரம், லட்சுமிவேல் கனிக்கொரைரா, ஓபிசி சிறப்பு செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மண்டல துணைத் தலைவர் ஜெயரூபி, ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் ஜெயக்குமார், மருத்துவர் பிரிவு மாவட்ட தலைவர் பாலாஜி மற்றும் பிரச்சார பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சொக்கலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital




CSC Computer Education




Thoothukudi Business Directory