» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வ.உ.சி. துறைமுக ஒர்க்கர்ஸ் யூனியன் திறப்பு விழா

சனி 10, ஜனவரி 2026 8:35:14 PM (IST)



தூத்துக்குடி வஉசி துறைமுக ஒர்க்கஸ் யூனியன் சங்கம் திறப்பு விழா நடந்தது 

தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகில், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கான துறைமுக ஒர்க்கர்ஸ் யூனியன் என்ற புதிய தொழிலாளர் சங்கம் திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவர் எஸ். தினகரன் தலைமை தாங்கினார். துறைமுக செயலாளர் எஸ்பி மோகன் குமார் புதிய சங்கத்தை திறந்து வைத்தார். 

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட துறைமுக முதன்மை பொறியாளர் சீனிவாச ராவ் சில்லி குத்துவிளக்கு ஏற்றினார். இந்நிகழ்ச்சியில் துறைமுக முன்னாள் கடல்சார் அலுவலர் எஸ் பகவத்சிங், பிரிட்ஜத், ஜெனோரா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க செயலாளர் சகாயராஜ் பொருளாளர் அமல்ராஜ், சூசையா, ஞானப்பிரகாசம், துறைமுக தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory