» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை முகாம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
சனி 10, ஜனவரி 2026 4:50:02 PM (IST)

தூத்துக்குடியில் மீனவா் நலவாாியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம்களை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
தமிழ்நாடு மீனவா் நலவாரியம் உறுப்பினா் சோ்க்கை சிறப்பு முகாம் தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடி இறங்குதளம், மீன்பிடி துறைமுகம், பாத்திமாநகா் ஆகிய 3 இடங்களில் நடைபெற்றது. இந்த முகாம்களை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது: கடந்த 2007-ம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தொடங்கப்பட்ட மீனவா் நலவாரியத்தில் வலை பின்னுவோர், ஏலம் விடுவோர், தலைசுமை வியாபாரம் செய்வோர், பதப்படுத்தல் பணியில் ஈடுபடுவோர் என 15-க்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இணையலாம்.
தி.மு.க. ஆட்சி அமைந்தபின் மீன்பிடித்தடைகாலத்தில் ரூ.5 ஆயிரம் வழங்கியதை ரூ.8 ஆயிரமாக உயா்த்தியுள்ளோம். அதுபோல் டீசல் மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்படுகிறது. தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம், திரேஸ்புரம் அண்ணா காலணி, விவேகாணந்தன்நகா் கடற்கரை பகுதியில் வளர்ச்சி பணிகளுக்கு பல கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு சில பணிகள் பணிகள் முடிவடைந்துள்ளன.
மத்திய அரசு வருமான வரித்துறை, அமலாக்கதுறை, தோ்தல் ஆணையத்துடன் இணைந்து மிரட்டியது மட்டுமின்றி தற்போது திரைப்படை தணிக்கை துறையும் இணைந்துள்ளது என்று பேசினார்.
விழாவில் மீன்வளத்துறை இணை இயக்குனா் இளம்வழுதி, தமிழ்நாடு மீனவர் நல வாரியத் தலைவர் ஜோசப் ஸ்டாலின், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாவட்ட மீனவரணி அமைப்பாளர் அந்தோணி ஸ்டாலின், உறுப்பினா் லெனின், துணை மேயா் ஜெனிட்டா, மாவட்ட அவைத் தலைவர் செல்வராஜ், மண்டல தலைவா் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, சிறுபான்மை அணி துணை அமைப்பாளர் நிக்கோலாஸ் மணி, மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தா், உள்பட பலர் கலந்துகொண்டனர். மீன்வளத்துறை உதவி இயக்குனா் புஷ்ராஷப்னம் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








