» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 வழங்கும் திட்டம் : அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்
வியாழன் 8, ஜனவரி 2026 11:21:42 AM (IST)

தூத்துக்குடியில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் கீதாஜீவன் துவக்கி வைத்தார்.
2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையினை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழகத்திலுள்ள அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழுக்கரும்புடன் ரொக்கத்தொகை ரூ.3,000/- (ரூபாய் மூவாயிரம் மட்டும்) அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் 957 நியாயவிலைக் கடைகளில் மொத்தம் 5,41,007 குடும்ப அட்டைகள் உள்ளன. இந்த மொத்த குடும்ப அட்டைகளில் கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழு, தமிழ்நாடு வாணிக கழகக் கடைகள் மற்றும் இலங்கைத் தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இன்று அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000/-ம் ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடி டூவிபுரம் நியாய விலைக் கடையில் அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு ஆகிய பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை அமைச்சர் பி.கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.
4ஆயிரம் கோடி ஊழல் ஆதாரம் உள்ளதா?
விழாவில் அமைச்சர் பேசுகையில், "கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் தமிழகம் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. அமைச்சர்களை குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே எதிர்க்கட்சியினர் பேசி வருகின்றனர். எனது துறையில் நான்காயிரம் கோடி ஊழல் நடந்ததாக தெரிவித்துள்ளனர். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? ஆளுங்கட்சி மீது குறை சொல்ல வேண்டும் என்பதற்காகவே அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றார்.
விழாவிற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு வங்கி நிர்வாக இயக்குனர் காந்திமதிநாதன், துணைப்பதிவாளர் கலை அரசி, செயலாளர் ஜனலட்சுமி, சார் பதிவாளர்கள்,ஷாம் டேனியல்ரா,ஜ அந்தோணிபட்டுராஜ், கலை இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், திமுக கவுன்சிலர்கள் முருகன் இசக்கி, சரவணகுமார், பகுதி செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கோசாலையில் மாட்டுப்பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 12:44:33 PM (IST)

லாரி மீது வேன் மோதி 2 பேர் பரிதாப பலி : தூத்துக்குடி அருகே சோக சம்பவம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:50:15 AM (IST)

மேல்மருவத்தூர் ஆன்மிக இயக்கம் சார்பில் 41ம் ஆண்டு பொங்கல் சமுதாயப்பணி
வெள்ளி 16, ஜனவரி 2026 11:40:38 AM (IST)

பா.ஜ.க. கோலப்போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கல்
வெள்ளி 16, ஜனவரி 2026 11:31:16 AM (IST)

தூத்துக்குடி நல்லாயன் பள்ளியில் பொங்கல் விழா
வெள்ளி 16, ஜனவரி 2026 11:16:57 AM (IST)

மூன்று முறை தற்கொலைக்கு முயன்றவர் மீண்டும் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
வெள்ளி 16, ஜனவரி 2026 11:11:50 AM (IST)








