» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொது அறிவை வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம்: அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

புதன் 7, ஜனவரி 2026 3:36:36 PM (IST)



கல்வியும் பொது அறிவையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் என்று கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
      
தூத்துக்குடி குறுக்குசாலையில் உள்ள கீதாஜீவன் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் 3வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு திமுக வடக்கு மாவட்ட செயலாளரும் சமூகநலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றி 209 பேருக்கு பட்டங்களை வழங்கினார். 

விழாவில் அவர் பேசுகையில், "கல்லூரி படிப்பு முடிந்தவுடன் வேலை வாய்ப்பை உருவாக்கி கொடுக்கும் வகையில் திறனாய்வு பயிற்சி வழங்கப்படுகிறது எதிர்கால தலைமுறையினரை உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் கல்வியும் மருத்துவமும் எனக்கு இரண்டு கண்கள் என்று பல விழாக்களில் முதலைமைச்சர் முக.ஸ்டாலின் பேசுவார். 

காரணம் அவ்வளவு தூரம் இந்த கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று தான் ஓவ்வொரு வரும் தனது தாய் தந்தைகளின் சொல்படி கேட்டு ஆசிரியர்கள் வழிகாட்டுதலன் படி போராசிரியர்களின் அறிவுரைகளின் மூலம் கல்லூரி படிப்பை முடித்துள்ளீர்கள் கல்வியும் பொதுஅறிவையும் வளர்த்து கொண்டால் வாழ்க்கையில் சாதிக்கலாம் எல்லோருக்கும் ஓரு லட்சியம் இருக்க வேண்டும்.

ஐஏஎஸ் ஐபிஎஸ் ஐஎஃப் எஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கு வரவேண்டும் என்பது மட்டுமின்றி மருத்துவர் பொறியாளர் என தன்னை வளர்த்துக் கொண்டு பொதுவாழ்விலும் ஈடுபட வேண்டும் என்ற என்னத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். அரசியலில் இருந்து பல பணிகளை செய்ததின் மூலம் முக்கிய பதவிகளை அடைந்துள்ள நிலையில் நீங்களும் இது போன்ற பணிகளுக்கு வரவேண்டும் பட்டம் பெற்ற அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன் என்று பேசினார்.

விழாவில் கல்லூரியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப் முன்னிலை வகித்தார். இளங்குமரன் ஆண்டறிக்கையை வாசித்தார். அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் மகிழ்ஜான் சந்தோஷ், டாக்டர் கீர்த்தனாமகிழ், சுதன்கீலர், சுதாசுதன், பல்லைக்கழக பிரதிநிதி சௌடியா,  வடக்கு மாவட்ட மருத்துவஅணி தலைவர் அருண்குமார், கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஓ அப்படியாJan 8, 2026 - 07:34:34 AM | Posted IP 162.1*****

தலைவர் தத்திக்கே பொது அறிவே கிடையாது.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education




Arputham Hospital




Thoothukudi Business Directory