» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் தயார் : மேயர் ஜெகன் பெரியசாமி

புதன் 7, ஜனவரி 2026 12:27:03 PM (IST)



போகி பண்டிகை நாளில் வீடுகளில் கழிக்கப்படும் துணிகளை எரிக்க கூடாது. அதை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி கூறினார்..

தூத்துக்குடி மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் பிரியங்கா, துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

முகாமை தொடங்கி வைத்து மேயர் பேசியதாவது "தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நான்கு மண்டல அலுவலகத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. போகி பண்டிகை நாளில் வீடுகளில் கழிக்கப்படும் துணிகளை எரிக்க கூடாது. அதை தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.

பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் 4 மண்டலங்களிலும் மனுக்கள் குறைந்து வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காக்கள் தயார் படுத்தப்பட்டு வருகிறது. புதிதாக எழில் நகரில் ஒரு பூங்கா உருவாக்கப்பட்டுள்ளது. தனசேகர் நகரில் உள்ள பூங்கா பணி நிறைவு பெற்றுள்ளது. ராஜாஜி பூங்கா, முத்துநகர் பூங்கா, ரோச் பூங்காவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் சிறு சிறு தெருக்களில் தேவர் பிளாக் ரோடுகள் முழுமையாக போடப்பட்டு விட்டது. ஒரு சில இடங்களில் மட்டும் ரோடுகள் போட வேண்டும் அதற்காக அறிக்கை தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் புதிய சாலைகள் அமைக்கப்படும் என்றார். நிகழ்ச்சியில் மண்டல ஆணையர் முனீர் அகமது, நகர் நல அலுவலர் சரோஜா, சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி, மண்டல தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதா முருகேசன், ரங்கசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


மக்கள் கருத்து

ஏம்பாJan 8, 2026 - 07:36:47 AM | Posted IP 172.7*****

சாலைகளை கவனியுங்கள். மழைக்காலம் முடிந்தவுடன் சாலைகள் சரிபடுத்தப்படும் என்று கூறினீர்களே, செய்யுங்க. இன்னுமா உங்களை நம்பிட்டு இருக்கோம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

CSC Computer Education



Arputham Hospital





Thoothukudi Business Directory