» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய வாலிபர் கைது
திங்கள் 8, டிசம்பர் 2025 8:35:30 PM (IST)
தூத்துக்குடியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் கோவில் நிர்வாகியான தங்கபாண்டி மகன் இசக்கிபாண்டி (46) என்பவர் நேற்று (07.12.2025) இரவு கோவிலை பூட்டிசென்று இன்று காலை வந்து திறந்து பார்க்கும்போது கோயில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து பணம் திருடு போனது தெரியவந்துள்ளது.இதுகுறித்து இசக்கிபாண்டி இன்று அளித்த புகாரின் பேரில் தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் லெவிஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் விஜயகுமார் (19) என்பவர் மேற்படி கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விஜயகுமாரை கைது செய்து அவரிடமிருந்து ரூ.10,000 பணத்தையும் மீட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










