» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு பணி நியமன ஆணை : எஸ்பி வழங்கினார்
திங்கள் 8, டிசம்பர் 2025 8:23:33 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வான 13 பேருக்கு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்..
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலியாக இருந்த 13 பேருக்கு மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு நடைபெற்றது. இதில் 9 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 13 பேர் ஊர்க்காவல் படை வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
மேற்படி தேர்வு செய்யப்பட்ட 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கு இன்று (08.12.2025) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து பணி நியமன ஆணை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.மேற்படி 13 ஊர்க்காவல் படை வீரர்களுக்கும் நாளை (09.12.2025) முதல் 45 நாட்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்நிகழ்வின் போது தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர்கள் ஆறுமுகம் உடனிருந்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










