» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
திங்கள் 8, டிசம்பர் 2025 7:56:03 PM (IST)

காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபரை கண்டித்து தூத்துக்குடியில் அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பெருந்தலைவர் காமராஜரை இழிவுபடுத்தி பேசிய யூடியூபர் முக்தாரை கண்டித்து தூத்துக்குடியில் விவிடி சிக்னல் அருகே அனைத்து நாடார் இயக்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நாடார் பேரவை வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் எஸ்.ஜெயச்சந்திரன், பெருந்தலைவர் மக்கள் நல சங்கம் அமைப்பு நிறுவனத் தலைவர் எஸ்.பி. மாரியப்பன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
பனங்காட்டு மக்கள் கழகம் மாநில வழக்கறிஞரணி செயலாளர் சிலுவை நாடார், தமிழ்நாடு நாடார் பேரவை தென்மண்டல தலைவர் பொன்ராஜ் சிவா, காமராஜர் லட்சிய பேரவை பிரசன்னா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநில வர்த்தக அணி செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன், காங்கிரஸ் ஐஎன்டியூசி பொதுச் செயலாளர் பெருமாள்சாமி, தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர் அஜிதா அக்னல், பறையர் பாதுகாப்பு மாநில தலைவர் இளவரச பாண்டியன், சத்திரிய சான்றோர் படை ஹரி நாடார் உள்ளிட்டோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மாவட்ட தலைவர் விநாயகமூர்த்தி, பனங்காட்டு மக்கள் கழக மாநில செயலாளர் சொர்ணவேல் குமார், மாவட்ட செயலாளர் அற்புதராஜ், சமத்துவ மக்கள் கழகம் மாவட்ட செயலாளர் அற்புதராஜ், நாம்தமிழர் கட்சியை சார்ந்த ரூபன், தமிழ்நாடு பனை பொருள் வாரிய வாரிய உறுப்பினர் காங்கிரஸ் எடிசன், பாஜக காசிலிங்கம், மூத்த வழக்கறிஞர் ராஜ ஜெயபால் உட்பட பலர் கலந்து கொண்டு, முத்தாரை கைது செய்ய வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










