» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக புகார் : செயல் அலுவலர் தர்ணா போராட்டம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:46:58 PM (IST)

ஆழ்வார்திருநகரியில் கோவில் நிலத்தை அபகரிக்க முயல்வதாக கூறி கோவில் செயல் அலுவலர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியில் அமைந்துள்ள ஆதிநாதர் பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நான்கு சென்டு இடம், சுமார் 1 முதல் 2 கோடி ரூபாய் பெரு மதிப்புள்ள இடமாக உள்ளது. இந்த நிலையில், அறங்காவலர் குழு தலைவர் கணேசன் உதவியோடு ஜெகதீஷ் என்பவர் கோவில் இடத்தில் அனுமதி இல்லாமல் கட்டிடம் கட்டி இடத்தை அபகரிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைக் கண்டித்து கோவில் செயல் அலுவலர் சதீஷ் என்பவர் கட்டிடம் கட்டும் இடத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கட்டிட பணிகளை நிறுத்திய பிறகு அந்த இடத்திலிருந்து செயல் அலுவலர் சதீஷ் கிளம்பி சென்றார். மேலும் கோவில் இடத்தை வேறு யாரும் அபகரிக்க முன்வரக் கூடாது என காவல்துறையினரிடம் மனு அளித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










