» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி துவக்கம்!
திங்கள் 8, டிசம்பர் 2025 4:36:34 PM (IST)

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரியில் படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி பற்றிய ஓருவார கால உள்வளாகப் பயிற்சி இன்று தொடங்கியது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையானது, நான் முதல்வன் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிதியுதவியுடன் நடத்தும் ‘‘படகு ஓட்டுநர் உரிமச் சான்றிதழ் படிப்புப் பயிற்சி" என்ற ஒரு வாரகால உள்வளாகப் பயிற்சியானது 08.12.2025 முதல் 15.12.2025 வரை நடைபெற உள்ளது.
இதன் துவக்க விழாவானது இன்று காலை தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம் மற்றும் தொழில்சார் பயிற்சி மையத்தில் வைத்து நடைபெற்றது. இப்பயிற்சியில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சார்ந்த 23 விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் டே.அருண் ஜெனிஸ் வரவேற்புரையாற்றினார். மீன்பிடித் தொழில் நுட்பவியல் மற்றும் மீன்வளப் பொறியியல் துறையின் உதவிப் பேராசிரியர் மற்றும் பயிற்சித் திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் த. ரவிக்குமார் பயிற்சி விளக்கவுரையாற்றினார்.
துவக்க விழாவிற்கு மீன்வளக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் (பொ) சா. ஆதித்தன் தலைமையேற்றார். அவர் தம் தலைமையுரையில் மீன்பிடித் தொழில்நுட்பத் துறையில் மீனவர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவை பல்வேறு பயிற்சித் திட்டங்கள் மூலம் மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் (பொ),புஷ்ரா ஷப்னம், சிறப்புரையாற்றினார். அவர் தம் சிறப்புரையில் படகு ஓட்டுநர் உரிமம், கடலில் முதலுதவி மற்றும் படகு என்ஜின் சரி செய்தல் போன்றவற்றின் முக்கியத்துவம் பற்றி வலியுறுத்தினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாவட்டத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அலுவலகத்தின் உதவி பயிற்சி அலுவலர் விஜயகுமார், தமிழ்நாடு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, உதவி இயக்குநர் உ. உத்தண்டு ராமன், தமிழ்நாடு கடல்சார் பயிற்சிக் கழகம் முதல்வர் (ஓய்வு), கேப்டன் ஜே. மோகன் குமார், மற்றும் பொன்சரவண கண்ணன், மீன்வள ஆய்வாளர் ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
உதவிப் பொறியாளர் அ. அந்தோணி மிக்கேல் பிரபாகர், நன்றியுரை ஆற்றினார். முனைவர் பட்ட ஆராய்ச்சியாளர் சூ. எமிமா நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். துறையின் பணியாளர்கள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்களாகச் செயல்பட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவில்பட்டியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: வாலிபர் கைது
செவ்வாய் 9, டிசம்பர் 2025 9:37:40 PM (IST)

காவல்நிலையத்தில் சித்ரவதை செய்து படுகொலை: உதவி ஆய்வாளருக்கு ரூ.3 லட்சம் அபராதம்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:48:45 PM (IST)

தூத்துக்குடி மாநகராட்சியில் 10ம் தேதி பகுதி சபா கூட்டம் : ஆணையர் ப்ரியங்கா தகவல்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:42:50 PM (IST)

தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 2பேர் மீது குண்டா் சட்டம் பாய்ந்தது!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:10:50 PM (IST)

நீதிபதியை விமர்சித்த திமுக எம்எல்ஏ மகன் மீது காவல் நிலையத்தில் இந்து முன்னணி புகார்
செவ்வாய் 9, டிசம்பர் 2025 8:03:56 PM (IST)

தூத்துக்குடி-மைசூர் கிறிஸ்துமஸ், புத்தாண்டு சிறப்பு ரயில்கள் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
செவ்வாய் 9, டிசம்பர் 2025 7:57:20 PM (IST)










