» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
காமராஜர் குறித்து அவதூறு வெளியிட்ட யூடியூபர் மீது தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 1:39:58 PM (IST)

காமராஜர் குறித்து அவதூறு வெளியிட்ட யூடியூபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
யூடியூபர் சேனல் நடத்தி வரும் முக்தார் என்பவர் அவருடைய சேனலில் முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தலைவர் காமராஜர் குறித்து அவதூராக பேசி, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை இழிவாக சித்தரித்துபேசியும் வெளியிட்டுள்ளார். இதற்கு தமிழக முழுவதும் கண்டனம் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் யூடியூபர் முக்தார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நாடார் பேரவை சார்பில் மாவட்ட தலைவர் அருண் சுரேஷ் குமார் தலைமையில் தென்பாகம் காவல் நிலையத்தில் இன்று புகார் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நாடார் பேரவை மாவட்ட பொருளாளர் சுப்பையா மாநகரத் தலைவர் அசோக் சமத்துவ மக்கள் கழகம் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாவட்ட செயலாளர் மாலைசூடி அற்புதராஜ், மாவட்ட அவைத் தலைவர் கண்டிவேல், மாவட்டத் துணைச் செயலாளர் அருள்ராஜ் மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் வக்கீல் சகாயராஜ், வக்கீல் பெஸ்டஸ் மாவட்ட தொண்டர் அணி செயலாளர் முத்து செல்வம் மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சிவசு. முத்துக்குமார், மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










