» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:54:35 AM (IST)

பிரதமர் மோடிக்கு 2025 ஆம் ஆண்டுக்கான பாரதி விருது வழங்கப்படுகிறது என்று வானவில் பண்பாட்டு மைய நிறுவனர் கே. ரவி. தெரிவித்தார்.
சென்னையை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் வானவில் பண்பாட்டு மையத்தின் நிறுவனர் கே.ரவி, கோவில்பட்டியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாரதியாரின் 144ஆவது பிறந்த நாள் வியாழக்கிழமை (டிச. 11) சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு, இந்த மையம் சார்பில் ‘பாரதி திருவிழா 2025’ தொடக்க விழா எட்டயபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை (டிச.7) நடைபெறுகிறது.
ஆண்டுதோறும் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலிலிருந்து, பாரதியார் இல்லம் வரை ஜதி பல்லக்கு ஊர்வலத்தை நடத்திவருகிறோம். இம்முறை பாரதியாரின் விருப்பம் நிறைவேற்றும் வகையில், அவரது இல்லத்தில் இருந்து, எட்டயபுரம் அரண்மனைக்கு ஜதி பல்லக்கில் அவரது சிலையை வைத்து, கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, அரண்மணை வளாகத்தில் பாரதியார் சிலை வைக்கப்படுகிறது.
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பல்வேறு போட்டிகள், கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வீரம் தலைக்கு மண் என்ற நூல் வெளியிடப்படுகிறது. ஆண்டுதோறும் வழங்கப்படும் பாரதி விருதை இந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு செய்துள்ளோம். இதில், பாரதியாரின் கொள்ளு பேரன் ராஜ்குமார் பாரதி, தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி செட்டியார், வி.ஜி.சந்தோஷம், எம் .முரளி, காவல் துறை அதிகாரி (ஓய்வு) ஆர். நட்ராஜ் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.
பாரதி திருவிழா, திங்கள்கிழமை (டிச.8) பாரதியாரின் மனைவி செல்லம்மாளின் சொந்த ஊரான கடையத்திலும், செவ்வாய்க்கிழமை (டிச. 9) புதுவை பல்கலைக் கழகத்திலும், புதன், வியாழக்கிழமைகளில் சென்னை திருவல்லிக்கேணியிலும் நடைபெறுகிறது என்றார். பேட்டியின்போது, எட்டயபுரம் மகாராஜா சந்திர சைதன்யா, வானவில் மையத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியை ஸ்ரீலட்சுமி, ரத்னா, சாந்தி, ரமா ஆகியோர் உடன் இருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










