» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தற்கொலை : தூத்துக்குடியில் பரிதாபம்!
செவ்வாய் 2, டிசம்பர் 2025 4:29:47 PM (IST)
தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் மனைவி கோபித்துச் சென்றதால் லாரி டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முள்ளக்காடு சந்தோஷம் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா மகன் காளிமுத்து (48), லாரி டிரைவர். இவருக்கு சித்ரா என்ற மனைவியும் ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். காளிமுத்து வேலைக்கு சென்று விட்டு தினசரி மதுபோதையில் வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 15 தினங்களுக்கு முன்பு சித்ரா கணவருடன் கோபித்துக் கொண்டு தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டாராம்.
இதனால் மன வேதனை அடைந்த காளிமுத்து நேற்று இரவு தனது வீட்டின் படுக்கை அறையில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த முத்தையாபுரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழக புதிய அமைச்சரவை: தூத்துக்குடி எம்.எல்.ஏ ஸ்ரீநாத்திற்கு மீன்வளத்துறை ஒதுக்கீடு!
வியாழன் 21, மே 2026 12:50:33 PM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் என்டிபிஎல் நிறுவனத்தின் சார்பில் புதிய அரங்குகள் திறப்பு!
வியாழன் 21, மே 2026 12:25:31 PM (IST)

தேசிய நெடுஞ்சாலையில் பைக் விபத்து: வாலிபர் பலி!
வியாழன் 21, மே 2026 11:54:05 AM (IST)

அரசு உதவிபெறும் பள்ளிகளில் வசூல் வேட்டை : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்!
வியாழன் 21, மே 2026 11:30:58 AM (IST)

பத்தாம் வகுப்பு தேர்வில் கோவில்பட்டி பள்ளி 100% தேர்ச்சி!
வியாழன் 21, மே 2026 11:02:36 AM (IST)

தூத்துக்குடியில் பெண் வெட்டிக் கொலை: 2பேர் கைது!
வியாழன் 21, மே 2026 10:52:28 AM (IST)










