» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
லாரியில் இருந்து தவறி விழுந்து லோடு மேன் பலி
செவ்வாய் 2, டிசம்பர் 2025 3:36:41 PM (IST)
தூத்துக்குடியில் லாரியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த லோடு மேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடி சுந்தர ராமபுரம் முதல் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (45), இவர் லாரியில் லோடு மேனாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று காலை தூத்துக்குடி அம்பேத்கர் நகரில் லாரியிலிருந்து தார்ப்பாய்களை அவிழ்த்து மடித்துக் கொண்டிருந்தபோது திடீரென நிலை தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இரவு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த கார்த்திகேயனுக்கு சந்திரா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பைக்குகள் நேருக்கு நேர் மோதல் : 2 பேர் உயிரிழப்பு
திங்கள் 8, ஜூன் 2026 10:06:07 AM (IST)

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு : விண்ணப்பங்கள் வரவேற்பு - கோட்ட மேலாளர் அழைப்பு!
திங்கள் 8, ஜூன் 2026 8:42:53 AM (IST)

கோயில் உண்டியலை உடைத்துத் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு!
திங்கள் 8, ஜூன் 2026 8:36:24 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைேமாதியது: 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!
திங்கள் 8, ஜூன் 2026 8:24:55 AM (IST)

மதுப்பழக்கத்தால் குடும்பத் தகராறு மனைவி கோபித்துச் சென்றதால் கணவர் தற்கொலை!
திங்கள் 8, ஜூன் 2026 8:20:06 AM (IST)

பாலியல் புகாரைத் திரும்பப் பெற வலியுறுத்தி தவெக எம்.எல்.ஏ மிரட்டல் - இளம்பெண் பரபரப்பு பேட்டி!
திங்கள் 8, ஜூன் 2026 8:10:55 AM (IST)










