» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சாலையில் ஆபத்தான பள்ளங்களால் விபத்து அபாயம்: வாகன ஓட்டிகள் அச்சம்!
ஞாயிறு 30, நவம்பர் 2025 2:01:57 PM (IST)

அத்திமரப்பட்டி- புதுக்கோட்டை பஞ்.யூனியன் சாலையில் ஆபத்தான பள்ளங்களால் விபத்து அபாயம் உள்ளதால் சாலையை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2023-ல் பெய்த பெருமழை காரணமாக, கோரம்பள்ளம் குளத்தின் கரையிலும், உப்பாற்று ஓடையின் கரைகளில் பல இடங்களிலும் உடைப்பு ஏற்பட்டு, குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், ஏராளமான சாலைகள் அரிக்கப்பட்டு, பல ஊர்கள் துண்டிக்கப்பட்டன. அதனை தொடர்ந்து கரை உடைப்புகள் அடைக்கப்பட்டு, சாலைகளும் சரி செய்யப்பட்டன.
அந்த வகையில், கோரம்பள்ளம் 24 மடை கண்மாய் அருகே உப்பாற்று ஓடை தெற்கு கரைப்பகுதியில் பெரிய உடைப்புகள் ஏற்பட்டு 24 மடை கண்மாய்க்கும், அத்திமரப்பட்டிக்கும் இடையே 2 இடங்களில் சாலைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதன் காரணமாக, புதுக்கோட்டை - ஸ்பிக் நகர் பிரதான சாலையில் போக்குவரத்து முழுவதுமாக துண்டிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, அந்த இடங்களில் போர்க்கால அடிப்படையில் மணல் நிரப்பப்பட்டு, ஒரு வார காலத்தில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, 24 மடை கண்மாய்க்கும், அத்திமரப்பட்டிக்கும் இடையே தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் நிர்வாகத்தால் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை போடப்பட்டு ஓராண்டு நிறைவடைவதற்குள், வெள்ளத்தால் உடைப்பெடுத்த மேற்படி சாலையிலுள்ள 2 இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டு ஜல்லி கற்கள் பெயர்ந்து சிதறி சேதமாக தொடங்கியது. பின்னர் அந்த பள்ளங்களை சீரமைக்காததால் தற்போது மிகப்பெரிய பள்ளங்களாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது.
இதனால், இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் ஆபத்தான சாகச பயணத்தையே மேற்கொண்டு வருகின்றனர். இந்த ஆபத்தான பெரிய பள்ளங்களால் தொடர்ந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், தூத்துக்குடி பஞ்சாயத்து யூனியன் நிர்வாக அதிகாரிகள் உடனே தீவிர கவனம் செலுத்தி, 24 மடை கண்மாய்க்கும், அத்திமரப்பட்டிக்கும் இடைப்பட்ட சாலையில் காணப்படும் பள்ளங்களை சீரமைத்து தர வேண்டும் என அத்திமரப்பட்டி காந்திய சேவா மன்றம் மற்றும் புதுக்கோட்டை மரம் வரம் அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
ஓட்டு போட்ட முட்டாள்Nov 30, 2025 - 10:32:49 PM | Posted IP 162.1*****
திருச்செந்தூர் செல்லும் சாலைகள் ரொம்ப மோசம், காமராஜ் கல்லூரி இருந்து தருவை மைதானம் செல்லும் வழி எல்லாம் ரொம்ப மோசம். 200 ரூபாய் , 500 ரூபாய் , 1000, 2000 ரூபாய் ரூபாய் வாங்கி விளங்காத ஊர் சுற்றும் கோடீஸ்வரர் முட்டாளுக்கு ஓட்டு போடுங்க. போங்க...
மேலும் தொடரும் செய்திகள்

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் 80ஆவது சுதந்திர தின விழா
சனி 15, ஆகஸ்ட் 2026 12:54:17 PM (IST)

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:45:24 PM (IST)

ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் 80-வது சுதந்திர தின விழா!
சனி 15, ஆகஸ்ட் 2026 12:34:09 PM (IST)

கோவில்பட்டி நர்சிங் கல்லூரியில் சுதந்திர தினவிழா : போதைப் பொருள் ஒழிப்பு உறுதி மொழியேற்பு
சனி 15, ஆகஸ்ட் 2026 12:29:44 PM (IST)

ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் 80-வது சுதந்திர தின விழா கோலாகலம்!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:54:43 AM (IST)

தூத்துக்குடியில் டூவீலர் மீது லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி!
சனி 15, ஆகஸ்ட் 2026 11:45:00 AM (IST)










முட்டாள்Nov 30, 2025 - 10:33:43 PM | Posted IP 104.2*****