» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கேரள லாட்டரி விற்பனை: முதியவர் கைது!
சனி 15, நவம்பர் 2025 12:37:13 PM (IST)
கழுகுமலையில் சட்ட விரோதமாக கேரள லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை காவல் உதவி ஆய்வாளர் துரைசாமி தலைமையில் போலீசார் நேற்று சிவகாசி சாலையில் உள்ள பிள்ளையார் கோயில் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே பைக்கில் சென்றவரிடம் சோதனை நடத்தினர்.
கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருப்பதும், ஆரியங்காவில் லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்து விற்பனையில் ஈடுபட்டு வந்த கழுகுமலை அரண்மனை வாசல் தெருவை சேர்ந்த மாரியப்பன் மகன் சோமு (73) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த 46 லாட்டரி சீட்டுகள், ரூ.5,400, பைக் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










