» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி டீ மாஸ்டர் பலி!
சனி 15, நவம்பர் 2025 8:20:06 AM (IST)
கோவில்பட்டியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி டீ மாஸ்டர் உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ரயில் நிலையத்திற்கும் - இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் ரயில்வே தண்டவாளத்திற்கும் இடைப்பட்ட இடத்தில் நேற்று முதியவர் சடலம் கிடப்பதாக தூத்துக்குடி ரயில்வே போலீசாக்கு தகவல் கிடைத்ததாம். இதையடுத்து போலீசார் சடலத்தை கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், எட்டயபுரம் வட்டம் , கருப்பூர் என்.சுப்பலாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வேல் மகன் ரத்தினவேல் (60) என்பதும், சிந்தலக்கரையில் உள்ள ஹோட்டலில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்த இவர், கோவில்பட்டி சீனிவாச நகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்ல தண்டவாளத்தை கடக்க முயன்றபோது ரயிலில் அடிபட்டு இறந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கிறிஸ்தவ ஆலயத்தில் இரு தப்பினர் மோதல்: தூத்துக்குடியில் பரபரப்பு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:40:33 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










