» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சரக்குகள் கையாளுவதில் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் புதிய சாதனை!

வெள்ளி 14, நவம்பர் 2025 4:54:29 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் அக்டோபர் 2025-ல் மொத்த சரக்குகள், சரக்குப்பெட்டங்கள், மற்றும் கப்பல் செயல்திறன் ஆகியவற்றில் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

இந்தியாவின் தென்பகுதியில் அமைந்துள்ள துறைமுகங்களில் மிகச்சிறந்த துறைமுகமான தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம், இந்த அக்டோபர் மாதத்தில், அனைத்து செயல்பாட்டு துறைகளிலும் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது. அக்டோபர் 2025 மாதத்தில் மட்டும் துறைமுகம் 3.94 மில்லியன் டன் சரக்குகளையும், 75,110 டிஇயு சரக்குப் பெட்டகங்களையும் கையாண்டுள்ளது. இது அக்டோபர் 2024-இல் கையாளப்பட்ட 3.55 மில்லியன் டன்கள் மற்றும் 62,158 டிஇயு சரக்குபெட்டகங்களை  ஒப்பிடுகையில் 10.94% மற்றும் 20.83% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

தற்போதைய 2025-26-ஆம் நிதியாண்டில் அக்டோபர் மாதம் வரை துறைமுகம் மொத்தமாக 25.23 மில்லியன் டன் சரக்குகளையும், 5,03,204 டிஇயு சரக்குப் பெட்டகங்களையும்; கையாண்டுள்ளது. இது இதற்கு முந்தைய 2024–25 நிதியாண்டின் அக்டோபர் மாதம் வரை  துறைமுகம் கையாண்ட 24.56 மில்லியன்  டன் சரக்குகளை விட மொத்த சரக்குப் போக்குவரத்தில் 2.71%அதிக வளர்ச்சியையும்,  4,64,060 டிஇயு சரக்குப் பெட்டகங்களை விட 8.44% அதிக வளர்ச்சியைப் வெளிக்காட்டியுள்ளது.

துறைமுகத்தின் வலுவான செயல்திறனை மேலும் வெளிப்படுத்தும் விதமாக கப்பல்களின் வருகையில் ஏற்பட்ட உயர்வாகும். அக்டோபர் 2025 வரை மொத்தம் 1,064 கப்பல்கள் கையாளப்பட்டுள்ளன, இது கடந்த நிதியாண்டின் அதே காலநிலையில் கையாளப்பட்ட 1,004 கப்பல்களுடன் ஒப்பிடுகையில் உயர்வைக் காட்டுகிறது. இது துறைமுகத்தின் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையில் கப்பல் நிறுவனங்களின் அதிகரித்த நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

சரக்கு மற்றும் சரக்குப் பெட்டக கையாளுதலின் வளர்ச்சி மட்டுமல்லாமல், துறைமுகம் தனது செயல்திறனிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பெற்றுள்ளது. சரக்குப்பெட்டக கப்பல்கள் துறைமுகத்திற்குள் வந்து செல்லும் நேரம் (Container Vessels Turnaround Time -TRT) 20.16 மணிநேரத்திலிருந்து 19.20 மணிநேரமாக குறைந்துள்ளது, இதன் மூலம் வ.உ.சிதம்பரனார் துறைமுகம் இந்தியாவின் முக்கிய துறைமுகங்களில் சிறந்த செயல்திறன் கொண்ட துறைமுகங்களில் ஒன்றாக திகழ்கிறது.

செயல்திறன் மேம்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில், 2025 ஏப்ரல் மாதத்தில் தொடங்கப்பட்ட நேரடி துறைமுக நுழைவு வசதி (Direct Port Entry- DPE) ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கமாக திகழ்கிறது. இந்த வசதி அக்டோபர் 2025 வரை ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த சரக்கு பெட்டகங்களின் அளவான 2,05,484 டிஇயுக்களில் 17,506 டிஇயு சரக்குப்  பெட்டகங்களைக் கையாண்டதின் மூலம் மொத்த ஏற்றுமதியின் 8.52 சதவீகித பங்கைக் கொண்டுள்ளது சிறப்பிக்கத்தக்கது.

2025-26 நிதியாண்டின்  அக்டோபர் மாதம் வரை வெவ்வேறு சரக்குகளைக் கையாளுதலில் துறைமுகம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 2024–25 நிதியாண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், பெட்ரோலியம் பொருட்கள் 11.16%, சமையல் எண்ணெய் 8.57 மூ, உரம் 34.18%, உர மூலப்பொருட்கள் 8.32%, ராக் பாஸ்பேட்; 9.85%, உப்பு 531% மற்றும் கட்டுமானப் பொருட்கள் 177.22% வளர்ச்சியைப் பெற்றுள்ளன. இது துறைமுகத்தின் விரிவடைந்த வர்த்தகத்;தையும் பலவேறு சரக்குகளை கையாளுதலையும் வெளிப்படுத்துகிறது.

இந்த சாதனை குறித்து கருத்து தெரிவித்த  துறைமுகத்தின் தலைவர் சுசாந்த குமார் புரோஹித், அனைத்து துறைகளிலும் ஏற்பட்ட வளர்ச்சி துறைமுகத்தின் வலுவான செயல்திறன், திறன் மேம்பாடு மற்றும் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையின் பிரதிபலிப்பாகும் என தெரிவித்தார். மேலும் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு மேம்பாடு, நவினமயமாக்கல் மற்றும் பசுமை முயற்சிகளை வலுப்படுத்தி, பிராந்திய மற்றும் தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் முன்னணி துறைமுகமாக திகழும் நோக்கில் துறைமுகம் தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் கூறினார்.வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




CSC Computer Education


Arputham Hospital




Thoothukudi Business Directory