» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜராக வந்தவரை கைது செய்ய எதிர்ப்பு: போலீசார் - வழக்கறிஞர்கள் வாக்குவாதம்!
வியாழன் 13, நவம்பர் 2025 8:21:43 PM (IST)
தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிசிஆர் வழக்கில் ஆஜராக வந்தவரை காவல் துறையினர் வேறொரு வழக்கில் கைது செய்ய முயன்றனர். இதனால் வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே கடும் வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவராமன். இவர் இன்று தூத்துக்குடி நீதிமன்றத்தில் பிசிஆர் வழக்கு தொடர்பாக பிசிஆர் நீதிமன்றத்தில் ஆஜராக வந்துள்ளார். நீதிமன்றத்தில் ஆஜரான நிலையில் அவருக்கு வாய்தா போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் வேறொரு வழக்கு தொடர்பாக சிவராமனை காவல் உதவி ஆய்வாளர் ராஜபிரபு என்பவர் கைது செய்ய முயற்சி செய்து இழுத்துச் செல்ல முயன்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து அங்கே காவல் துறையினர் மற்றும் வழக்கறிஞர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில் நகர துணை கண்காணிப்பாளர் மதன் தலைமையிலான ஏராளமான காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் சிவராமனை கைது செய்வதற்காக இன்று தூத்துக்குடி நீதிமன்ற வவளாகத்திற்கு வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் வைத்து சிவராமனை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் உள்ளே வந்து யாரையும் கைது செய்யக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது இதை தொடர்ந்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










