» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நவ.15ல் தூத்துக்குடி-நாசரேத் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல்: வாக்கு சேகரிக்கும் பணி தீவிரம்!!
வியாழன் 13, நவம்பர் 2025 5:47:23 PM (IST)
தூத்துக்குடி-நாசரேத் திருமண்டலத்தில் இரண்டாம் கட்டமாக ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல் வருகிற 15ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 27.10.2025 தேதியிட்ட சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் உத்தரவின்படி தூத்துக்குடி -நாசரேத் திருமண்டலநிர் வாகியாக மீண்டும் நீதிபதி ஜோதி மணி பொறுப்பேற்று தேர்தல்களை கடந்த 3.9.2025 அன்று விட்ட இடத்தில் இருந்து தொடர வேண்டும் என்ற உயர்நீதி மன்ற உத்தரவின் அடிப்படையில், புதிய தேர்தல் அட்டவணையை வெளியிட்டார்.
அதன்படி, முதற்கட்ட தேர்தலான திருமண்டல பெருமன்ற பிரதிநிதிகள் மற்றும் சேகர மன்ற பிரதிநிதிகளுக்கான தேர்தல், கடந்த 9ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நடந்தது. பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு, உடனடியாக தேர்தல் முடிவுகள் ஆலயங்களில் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக சேகர மன்றத்திற்கு, சேகர ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல் திருமண்டல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல் 15.11.2025 அன்று நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் 12 ந் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. நவம்பர் 13ந் தேதி வேட்புமனுவைத் திரும்ப பெற கடைசி நாளாகும்.
இதைத் தொடர்ந்து 14ந் தேதி வெள்ளிக்கிழமை திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் இறுதிப் பட்டியல் சேகர அலுவலக அறிவிப்பு பலகையில் ஒட்டப்படுகிறது. இதைத் தொடர்ந்து 15 ந் தேதி சனிக்கிழமை மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரை சேகர மற்றும் திருமண்டல ஊழியர் பிரதிநிதிகள் தேர்தல் அந்தந்த ஊர்களில் உள்ள ஆலயத்தில் வைத்து நடைபெறுகிறது. இதில் சேகரத் தலைவர் தேர்தல் அதிகாரியாக செயல்படுகிறார்.
வாக்குப்பதிவு நிறைவு பெற்றதும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. மீண்டும் 16 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆலய ஆராதனையிலும் தேர்தலில் வெற்றி பெற்ற ஊழியர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்த தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஊழியர்களிடம் வாக்கு சேகரிக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்பனை: வாலிபர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 10:10:02 AM (IST)

திருச்செந்தூரில் பக்தர்கள் தங்கும் விடுதியை சுற்றுலா வளர்ச்சி கழகத்திடம் ஒப்படைக்க தடை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:40:40 AM (IST)

மெழுவர்த்தி தீபத்தால் குளிர்சாதனப்பெட்டி வெடித்து சிதறி ரூ.2 லட்சம் பொருட்கள் சேதம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:36:03 AM (IST)

தூத்துக்குடி தெப்பக்குளத்தில் தண்ணீர் வெளியேற்றம்
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:16:35 AM (IST)

டாஸ்மாக் காலி மது பாட்டில் திரும்ப பெறும் திட்டத்தில் முறைகேடு : நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:11:02 AM (IST)

போலி ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்ட இருவர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 9:03:51 AM (IST)










