» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அரசு மருத்துவமனையில் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம்: அடிக்கல் நாட்டுவிழா
வியாழன் 13, நவம்பர் 2025 5:12:44 PM (IST)

திருவைகுண்டம் அரசு மருத்துவமனை வளாகத்தில் ரூ.350 இலட்சம் மதிப்பீட்டில் ஆர்.நல்லகண்ணு பெயரில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு கனிமொழி எம்பி அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில் அவர் தெரிவித்ததாவது: திருவைகுண்டம் அரசு மருத்துவமனையை விரிவாக்கம் செய்து தர வேண்டும் என்ற மக்களுடைய நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்று, இன்றையதினம் ஐயா நல்லகண்ணு அவர்களுடைய பெயரிலேயே அதை கட்டுவதற்கு, ரூபாய் 350 இலட்சம் மதிப்பீட்டில் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளி சிகிச்சை பிரிவு மற்றும் அறுவை சிகிச்சை அரங்கத்திற்கு கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. மின்தூக்கி மற்றும் படிக்கட்டு வசதிகளுடன், தரைத்தளம் மற்றும் 2 தளங்களுடன் கட்டப்படவுள்ள மருத்துவமனையில் ஒவ்வொரு தளமும் 230.30 சதுர மீட்டர் என மொத்தம் 739.90 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ளன.
தரைதளத்தில் வரவேற்பு பதிவு, காத்திருப்பு அறை, அவசர நிலை மதிப்பீட்டு அறை, அவசர சிகிச்சை பிரிவு, பணி மருத்துவர் அறையும், முதல் தளத்தில் சிறிய செயல்பாட்டு அரங்கம், மீட்சி பிரிவு, பணி மருத்துவர் அறை மற்றும் இரண்டாம் தளத்தில் மருத்துவ பயனாளிகளை தயார்படுத்தும் அறை, அறுவை சிகிச்சை அறை, அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அறை உள்ளிட்ட வசதிகளுடன் கட்டப்படவுள்ளது. மேலும் 8 மாதங்களில் இந்தப் பணிகள் முடிவடைந்துவிடும். இதுமட்டுமில்லாமல், பின்னால் இறந்தவர்களின் உடல்களை பாதுகாக்கும் ஒரு பிணவறை கட்டிடம் (Mortuary Building) கட்டுவதற்கான அனுமதியும் கொடுத்திருக்கிறார்கள், அதற்கான பணிகளும் விரைவில் தொடங்கும் என தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி செ.அமிர்தராஜ், மேயர் பெ.ஜெகன், பொ.ப.து, செயற்பொறியாளர் (கட்டிடம்) செல்வி, திருவைகுண்டம் வட்டாட்சியர் தாஹிர் அஹ்மது மற்றும் அரசு துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










