» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கூத்தன்குழியில் நவ.21ல் கடலம்மா மாநாடு : சீமான் அறிவிப்பு
வியாழன் 13, நவம்பர் 2025 4:29:46 PM (IST)
நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வருகிற 21-ம்தேதி 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மரங்கள் மாநாடு, கால்நடை மாநாடு நடத்தியுள்ள நிலையில், தற்போது கடல் மாநாடு நடத்த உள்ளார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று சீமான் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;"நெல்லை மாவட்டம் கூத்தன்குழி முதன்மை சாலையில் வரும் 21-ம்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும். இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










