» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கல்: குடோனுக்கு சீல் வைத்த வேளாண்மை துறை அதிகாரிகள்!
வியாழன் 13, நவம்பர் 2025 12:50:28 PM (IST)

கோவில்பட்டி அருகே அனுமதியின்றி இயற்கை உரம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு வேளாண்மை துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ஊத்துப்பட்டியில் இருந்து தேசிய நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலை பகுதியில் உள்ள ஒரு தனியார் குடோனில் உர மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வேளாண்மை துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து,வேளாண்மை உதவி இயக்குனர்கள் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) நாகராஜன் (ராமநாதபுரம்), ஆதிநாதன் (தென்காசி) கண்ணன் (தூத்துக்குடி) கோவில்பட்டி வேளாண்மை உதவி இயக்குனர் மணிகண்டன், வேளாண்மை துறை அதிகாரிகள் காயத்ரி, நரேஷ் பிரபு ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு ஆய்வு நடத்தினர். குடோனில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள இயற்கை உரங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையெடுத்து, குடோனுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த குடோன் விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்னுச்சாமி என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
விருதுநகரில் உள்ள இயற்கை உர கடையில் சில நாட்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கிருந்த இயற்கை உரங்கள் (biostimulant) ஊத்துப்பட்டியில் உள்ள குடோனில் வைத்திருந்ததாக அதிகாரிகளிடம் குடோன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். எந்தவித அனுமதியும் இன்றி உரங்களை பதுக்கி வைத்து இருப்பது வேளாண்மை உரங்கள் தர கட்டுப்பாட்டு சட்டத்தின் படி சட்டவிரோதம் என்பதால் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










