» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளை முயற்சி : தூத்துக்குடியில் பரபரப்பு!
வியாழன் 13, நவம்பர் 2025 12:00:21 PM (IST)
தூத்துக்குடியில் ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி புதிய துறைமுகம் அருகே வணிக வளாகத்தில் இந்தியா 1 ஏடிஎம் உள்ளது. நேற்றிரவு மர்ம நபர் உள்ளே நுழைந்து ஏடிஎம் மிஷினை உடைத்து கொள்ளையடிக்க முயன்றுள்ளார். ஆனால் உடைக்க முடியாததால் ஆத்திரத்தில மானிட்டரை உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இது குறித்து ஏடிஎம் மையத்தின் சர்வீஸ் பார்ட்னரான தூத்துக்குடி கங்கா பரமேஸ்வரி காலனியை சேர்ந்த நடராஜன் மகன் சுரேஷ்குமார் (40) என்பவர் தெர்மல் நகர் காவல் நிலையத்தில் புகார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி, சப் இன்ஸ்பெக்டர் அய்யம் பெருமாள் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவான வாலிபர் குறித்து விசாரணை நடத்தியதில் அவர் காதர் மீரான் நகரை சேர்ந்த செல்வம் மகன் வேல்முருகன் என்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










