» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் மரணம்
வியாழன் 13, நவம்பர் 2025 8:19:06 AM (IST)
தூத்துக்குடியில் ஆய்வுப் பணிகளுக்காக வந்த சட்டப்பேரவை இணைச் செயலாளர் திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக்கணக்கு குழுவின் தலைவரான செல்வப் பெருந்தகை எம்எல்ஏ தலைமையில் தூத்துக்குடி மாவட்டத்தில் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து நேற்று (நவ.,12 ) ஆய்வு மேற்கொள்ள வந்தனர். இந்தக் குழுவுடன் நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு வருகை தந்த தமிழக சட்டப்பேரவை இணைச் செயலாளர் ரமேஷ் (57 ) என்பவருக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது.இதையடுத்து அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவரை சபாநாயகர் அப்பாவு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், பொதுக்கணக்கு குழு தலைவரான செல்வப் பெருந்தகை, எம்எல்ஏக்கள் ஊர்வசி அமிர்தராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்தனர்.
இதன் காரணமாக பொது கணக்கு குழுவின் ஆய்வு பணி ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி ரமேஷ் உயிர் இழந்தார். இதை அடுத்து அவரது உடல் சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










