» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 சிறுவர்கள் உட்பட 5பேர் கைது
புதன் 12, நவம்பர் 2025 10:40:24 AM (IST)
தூத்துக்குடியில் 4 கிலோ கஞ்சா வைத்திருந்தது தொடர்பாக 3 சிறுவர்கள் உட்பட 5பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி தெர்மல் நகர் காவல் நிலைய சப்இன்ஸ்பெக்டர்கள் அய்யம் பிள்ளை, பழனிச்சாமி, ஞானகுரு மற்றும் தலைமை காவலர் பொன்ராம் ஆகியோர் நேற்று இரவு புதிய துறைமுகம் - மதுரை பைபாஸ் ரோடு கேம்ப் 1 சர்வீஸ் ரோட்டில் வாகன தணிக்கை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரே மோட்டார் பைக்கில் வந்த 5 பேரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது, பெட்ரோல் டேங்க் மேல் வைத்திருந்த சாக்குப் பையில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி, தெர்மல்நகர் கோயில் பிள்ளை விளையைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி மகன் ரீகன் (21), சேகர் மகன் சதீஷ் (22) மற்றும் 3 இளம்சிறார்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நான்கு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாசரேத்தில் அரிவாளுடன் திரிந்த வாலிபர் கைது
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:44:36 PM (IST)

அறுந்து கிடந்த மின்கம்பியில் சிக்கி மாடு பலி: நிவாரணம் வழங்க உரிமையாளர் கோரிக்கை
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:34:38 PM (IST)

செய்துங்கநல்லூர் இலவச கண் சிகிச்சை முகாம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:27:21 PM (IST)

தூத்துக்குடி ரேஷன் கடையில் அமைச்சர் கீதாஜீவன் திடீா் ஆய்வு
ஞாயிறு 7, டிசம்பர் 2025 8:22:49 PM (IST)

திருச்செந்தூர் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் : 4 மணிநேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:59:21 PM (IST)

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் : இந்து முன்னணி அமைப்பினர் கைது!
ஞாயிறு 7, டிசம்பர் 2025 6:41:03 PM (IST)










